• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-09-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரசாங்கத் துறை சார்ந்த நிறைவேற்று உத்தியோகத்தர்களுக்கு விசேட படியொன்றை வழங்குதல்
- அரசாங்கத் துறை சார்ந்த நிறைவேற்று உத்தியோகத்தர்களுக்கு விசேட படியொன்றை வழங்குவ தற்குரியதாக தேசிய சம்பளங்கள், பதவியணிகள் ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட சிபாரிசுகளை ஆராய்ந்து அமைச்சரவைக்கு அறிக்கை யொன்றை சமர்ப்பிக்கும் பொருட்டு பொது நிருவாகம், அனர்த்த முகாமைத்துவம் மற்றும் கால்நடை அபிவிருத்தி அமைச்சரின் தலைமையில் மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சரையும் நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சரையும் உள்ளடக்கிய அமைச்சரவை உபகுழுவொன்று 2019 மார்ச் மாதம் 29 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் நியமிக்கப்பட்டது. இந்த உபகுழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட சிபாரிசுகளானவை அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதேபோன்று அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் நியமிக்கப்பட்ட அரசாங்கத்துறை சம்பள மீளமைப்பு தொடர்புபட்ட விசேட சம்பள ஆணைக்குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ள அரச உத்தியோகத்தர்களின் சம்பள அதிகரிப்பின் 50 சதவீதத்தை 2020‑07‑01 ஆம் திகதியிலிருந்தும் மீதி 50 சதவீத அதிகரிப்பை 2021‑01‑01 ஆம் திகதியிலிருந்தும் நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவையினால் 2019‑09‑10 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அதன் கூட்டத்தில் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டுள்ளமை பற்றி அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதற்கிணங்க, முழு அரசாங்க சேவைக்கும் நலன் பயக்கும் விதத்தில் சம்பள மீளமைப்பு தொடர்புபட்ட விசேட சம்பள ஆணைக்குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ள சம்பள அதிகரிப்பின் 50 சதவீதத்தை 2020‑01‑01 ஆம் திகதியிலிருந்து வழங்குவதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.