• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-09-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தெற்காசிய வலயத்தின் ஒருங்கிணைந்த பல் இடர் முன் எச்சரிக்கை முறைமை RIMES பிராந்திய மையத்தை தாபித்தல்
- தெற்காசிய வலயத்தின் ஒருங்கிணைந்த பல் இடர் முன் எச்சரிக்கை முறைமை RIMES பிராந்திய மையத்தை இலங்கை வளிமண்டலவியல் திணைக்கள மனையிடத்தில் தாபிப்பதற்கு அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆயினும், நிலவும் இடவசதி மற்றும் நிதி பிரச்சினை காரணமாக உத்தேச பிராந்திய மையத்தை நீர்பாசன திணைக்கள மனையிடத்தில் தாபிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளமைப் பற்றி கமத்தொழில், கிராமிய பொருளாதார அலுவல்கள், நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சரினாலும் பொது நிருவாகம், அனர்த்த முகாமைத்துவம் மற்றும் கால்நடை அபிவிருத்தி அமைச்சரினாலும் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்கள் அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.