• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-09-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கமத்தொழில், கிராமிய பொருளாதார அலுவல்கள், நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சை தாபிப்பதற்காக புதிய கட்டடமொன்றை நிர்மாணித்தல்
- கமநல அபிவிருத்தி திணைக்களம் அடங்கலாக கமத்தொழில், கிராமிய பொருளாதார அலுவல்கள், நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் கொழுபிலுள்ள ஏனைய அலுவலகங்களை "கொவிஜன மந்திரய" என்னும் ஒரே அலுவலக கட்டடத்தில் தாபிப்பதற்கு இயலுமாகும் வகையில் காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சுக்கு அண்மையில் உள்ள இந்த அமைச்சுக்கு சொந்தமானதும் பத்தரமுல்லையில் அமைந்துள்ளதுமான சுமார் 06 ஏக்கர் 'அம்பலங்கொடல்ல' என்னும் காணியில் மாடிக்கட்டிடமொன்றை நிர்மாணிக்கும் பொருட்டு கமத்தொழில், கிராமிய பொருளாதார அலுவல்கள், நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.