• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-09-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை கடற்றொழில் துறைமுகங்கள் கூட்டுத்தாபனத்திற்கு தனி வேறான சட்டமொன்றை வரைதல்
- இலங்கை கடற்றொழில் துறைமுகங்கள் கூட்டுத்தாபனத்தை சட்டரீதியில் பலப்படுத்தி வருமானம் ஈட்டும் ஆற்றலை மேம்படுத்துவதன் மூலம் சொந்தமாக இயங்குவதற்குத் தேவையான வருமானத்தை ஈட்டுவதற்கும் அதேபோன்று இலாபம் ஈட்டும் நிறுவனமொன்றாக மாற்றும் நோக்கில் இந்தக் கூட்டுத்தாபனத்திற்கு தனிவேறான புதிய பாராளுமன்ற சட்டமொன்றை சட்டவரைநரைக் கொண்டு வரையும் பொருட்டு கமத்தொழில், கிராமிய பொருளாதார அலுவல்கள், நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.