• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-09-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஶ்ரீ ஜயவர்தனபுர தேசிய தாதியர் பயிற்சி கல்லூரியை கொழும்பு பல்கலைக்கழகத்தின் தாதி விஞ்ஞான பீடத்திற்கு உடைமையாக்குத
- உயர் தேர்ச்சிமிக்க உலகளாவிய ரீதியில் போட்டிகரமான மட்டத்தில் தாதி தொழில் சார்பாளர்களை உருவாக்கும் நோக்கில் தாதி கல்வியை பட்டப்படிப்பு மட்டமாக விரிவுபடுத்தும் பொருட்டு தாதியர் பயிற்சி பீடமொன்று கொழும்பு பல்கலைக்கழத்திற்கு இணையாக ஶ்ரீ ஜயவர்தனபுர தேசிய தாதியர் பயிற்சி கல்லூரி கட்டடத்தை பயன்படுத்தி 2018 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சின் கீழ் நிறுவகிக்கப்படும் இந்த தாதியர் பயிற்சி கல்லூரிக்கு சொந்தமான கட்டடங்கள் மற்றும் சொத்துக்களை அதன் பணியாட்டொகுதி மற்றும் உரிய கட்டடம் அமைந்துள்ள ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலைக்கு சொந்தமான காணி கொழும்பு பல்கலைக்கழகத்தின் தாதியர் விஞ்ஞான பீடத்தினால் பயன்படுத்தக்கூடிய விதத்தில் நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சின் ஊடாக கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு உடைமையாக்கும் பொருட்டு நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.