• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-09-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
யுத்தம் நிலவிய காலப்பகுதியில் யுத்த பிரதேசங்கள் மற்றும் யுத்த பிரதேசமாக பெயர் குறிப்பிடப்படாத பிரதேசங்கள் என்பவற்றில் கடமையாற்றும் போது நேரடி பயங்கரவாத செயற்பாடுகள் காரணமாக முற்றாக அங்கவீனமுற்ற மற்றும் மரணித்த முப்படைகள் மற்றும் இலங்கை பொலிஸ் என்பவற்றின் உறுப்பினர்களுக்கு 55 வயது பூர்த்தியாகும் வரை செலுத்தப்பட்ட சம்பளம் மற்றும் படிகளை மரணித்த உறுப்பினர்களில் தங்கி வாழ்வோருக்கும் அங்கவீனமுற்ற உறுப்பினர்களுக்கும் அவர்களுடைய ஆயுட்காலம் வரை செலுத்துதல்
- உரிய விடயம் சம்பந்தமாக ஆராய்ந்து சிபாரிசுகளை சமர்ப்பிப்பதற்காக அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட பொது நிருவாகம் என்னும் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சின் மேலதிக செயலாளர் ஒருவரின் தலைமையிலான உத்தியோகத்தர்கள் குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சிபாரிசுக்கு அமைவாக யுத்தம் நிலவிய காலப்பகுதியில் யுத்த பிரதேசங்கள் மற்றும் யுத்த பிரதேசமாக பெயர் குறிப்பிடப்படாத பிரதேசங்கள் என்பவற்றில் கடமையாற்றும் போது நேரடி பயங்கரவாத செயற்பாடுகள் காரணமாக அல்லது பயங்கரவாத செயற்பாடுகளை தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகளின் போது அங்கவீனமுற்ற மற்றும் மரணித்த முப்படைகள் மற்றும் இலங்கை பொலிஸ் என்பவற்றின் உறுப்பினர்களுக்கும் அவர்களில் தங்கி வாழ்வோருக்கும் அவர்கள் தற்போது பெற்றுவரும் நலன்களுக்கு மேலதிகமாக தொடர்ந்தும் நிவாரணங்களை வழங்கும் பொருட்டு பாதுகாப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.