• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-09-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்துதல்
- 2019 ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதியன்று மதரீதியில் தீவிரபோக்குடையவர்களினால் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களின் பின்னர் தேசிய பாதுகாப்பினை உரிய முறையில் உறுதிசெய்யும் சவாலுக்கு முகங்கொடுக்கும் பொருட்டு அதற்காக தற்போதுள்ள நிறுவன ரீதியிலான செயற்பாட்டு கட்டமைப்பினை மேலும் முறையாக பலப்படுத்தும் தேவை இனங்காணப்பட்டுள்ளது. இதற் கிணங்க, 1999 ஆம் ஆண்டின் பொது மக்கள் பாதுகாப்பு கட்டளைச்சட்டத்தின்மீது விதிக்கப்பட்ட ஏற்பாடொன்றுக்கு அமைவாக தாபிக்கப்பட்டுள்ள தேசிய பாதுகாப்பு சபை மற்றும் புதிதாக நியமிப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ள தேசிய பாதுகாப்பு ஆலோசனைக்குழு, தேசிய பாதுகாப்புசபை செயலகம் மற்றும் தேசிய பாதுகாப்பு பற்றிய விசேடகுழு (பொருளாதாரம், சர்வதேச அலுவல்கள், சமூக, மத, ஆராய்ச்சி, புலனாய்வு, விஞ்ஞான, தொழிநுட்ப மற்றும் திறமுறை முகாமைத் துவம்) என்பவற்றை பாராளுமன்ற சட்டமொன்றின் மூலம் தாபிப்பதற்குத் தேவையான சட்டங்களை வரைவதற்கு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.