• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-09-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு மேலதிக வழிகாட்டி நங்கூர கலமொன்றை கொள்வனவு செய்தல்
- இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு 02 வழிகாட்டி நங்கூர கலங்களை வழங்குவதற்கான ஒப்பந்தத் தினை இலங்கையின் M/s. Colombo Dockyard PLC நிறுவனத்திற்கு கையளிப்பதற்கான அங்கீகாரம் அமைச்சரவையினால் ஏற்கனவே வழங்கப் பட்டது. தொழிற்பாட்டு துறைமுகங்களுக்குள் வினைத்திறனான பயண வழிகாட்டல் சேவைகளை வழங்கும் நோக்கில் கூறப்பட்ட 02 வழிகாட்டி நங்கூர கலங்களுக்கு மேலதிகமாக இன்னுமொரு வழிகாட்டி நங்கூர கலமொன்றை கொண்டிருப்பதற்கான தேவையினை இலங்கை துறைமுக அதிகாரசபை இனங்கண்டுள்ளபடியால், அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு பெறுகை வழிகாட்டல் 2006 இன் மறுகட்டளை பெறுகை முறையின் ஏற்பாடுகளின் கீழ் மேற்போந்த ஒப்பந்தத்தின் அதே நியதிகள் மற்றும் நிபந்தனைகளின்படி இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு மேலதிக வழிகாட்டி நங்கூர கலமொன்றை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தினை இலங்கையின் M/s. Colombo Dockyard PLC நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.