• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-09-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஒருகொடவத்தை - அம்பத்தலே வீதியின் வீதி பகுதிகளை புனரமைத்தலும் மேம்படுத்துதலும்
- அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப் பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு, ஒருகொடவத்தை - அம்பத்தலே (B-435) வீதியின் முதல் 2.9 கிலோமீற்றர் வீதி பகுதியையும் 4.2 கிலோமீற்றரிலிருந்து 5.44 கிலோமீற்றர் வரையிலான வீதி பகுதிகளையும் புனரமைத்து மேம்படுத்துவதற்கான (கட்டம் II) ஒப்பந்தத்தினை M/s. Tudawe Brothers (Pvt) Ltd., நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.