• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-09-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2019 10 01 ஆம் திகதியிலிருந்து 2020 05 31 ஆம் திகதிவரை பெற்றோல் இறக்குமதி செய்வதற்கான நீண்டகால ஒப்பந்தமொன்றை செய்து கொள்ளல்
- அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட விசேட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு, 2019 10 01 ஆம் திகதியிலிருந்து 2020 05 31 ஆம் திகதிவரையுள்ள எட்டு (08) மாத காலத்திற்குள் 900,000 பெரல் பெற்றோல் இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தத் தினை சிங்கபூரின் M/s Vitol Asia Pte. Ltd., நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.