• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-09-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
புத்தளம் நிலக்கரி மின் நிலையத்திற்குத் தேவையான நிலக்கரி கொள்வனவு
- புத்தளம் நிலக்கரி மின் நிலையத்திற்கு 300,000 மெற்றிக் தொன் நிலக்கரி கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட விசேட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு சிங்கப்பூர் OCBC Centre, 65 Chulia Street # 48 - 05 என்னும் முகவரியிலுள்ள M/s. Swiss Singapore Overseas Enterprises Pte. Ltd., நிறுவனத்திற்கு கையளித்தமை சார்பில் தழுவு அங்கீகாரம் வழங்கும் பொருட்டு மின்வலு, வலுசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.