• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-09-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2019 ஆம் ஆண்டு சார்பில் முப்படை, சிவில் பாதுகாப்பு திணைக்களம், தேசிய பயிலிளவல் படையணி, இலங்கை பொலிஸ், விசேட அதிரடிப் படையணி என்பவற்றிற்கு சீருடைத் துணிகள் உட்பட ஏனைய துணிவகைகளை கொள்வனவு செய்தல்
- முப்படைகளினதும் பாதுகாப்பு அமைச்சின் கீழுள்ள ஏனைய அரசாங்க நிறுவனங்களினதும் உடுதுணி தேவைகளை உள்நாட்டு துணி உற்பத்தியாளர்களிடமிருந்து பெற்றுக் கொள்வதற்கு அமைச்சரவையானது 2005 ஆம் ஆண்டில் அங்கீகாரம் வழங்கி யுள்ளது. இதற்கிணங்க, 2019 ஆம் ஆண்டு சார்பில் இலங்கை தரைப்படை, இலங்கை கடற்படை, இலங்கை விமானப்படை, சிவில் பாதுகாப்பு திணைக்களம், தேசிய பயிலிளவல் படையணி, இலங்கை பொலிஸ், விசேட அதிரடிப் படையணி என்பவற்றிற்குத் தேவையான சீருடைத் துணிகள் மற்றும் ஏனைய துணிவகைகளை கொள்வனவு செய்வதற்காக கோரப்பட்ட விலைகளுக்கு அமைவாக உள்நாட்டு புடவை அனுமதி சபையினால் தெரிவுசெய்யப்பட்ட உள்நாட்டு உற்பத்தியாளர்களிடமிருந்து இந்த துணி வகைகளை பெற்றுக் கொள்ளும் பாதுகாப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.