• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-09-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இராஜதந்திர, விசேட, உத்தியோகபூர்வ மற்றும் சேவை கடவுச்சீட்டுக்களை வைத்திருப்பவர்களுக்கு வீசா பெற்றுக் கொள்வதிலிருந்து பரஸ்பரம் விலக்களிப்பதற்காக இலங்கைக்கும் கம்போடியாவுக்கும் இடையில் செய்து கொள்ளப்படும் உடன்படிக்கை
- இரு நாடுகளுக்கும் இடையில் நிலவும் நட்புறவு ரீதியிலான உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் இராஜதந்திர, விசேட, உத்தியோகபூர்வ மற்றும் சேவை கடவுச்சீட்டுக்களை வைத்திருப்ப வர்களுக்கு வீசா பெற்றுக் கொள்வதிலிருந்து பரஸ்பரம் விலக்களிப்பதற்காக இலங்கைக்கும் கம்போடியா இராசதானிக்கும் இடையில் உடன்படிக்கை யொன்றைச் செய்து கொள்ளும் பொருட்டு உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.