• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-09-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தெரிவுசெய்யப்பட்ட பயண அமைவிடங்களுக்கு உரிய நேர அட்டவணைக்கமைய உள்நாட்டு விமான சேவைகளை நடைமுறைப்படுத்து வதற்காக உள்நாட்டு விமானசேவைகள் நிறுவனங்களுடன் நிதியீட்டு சாத்திய உடன்படிக்கை களை செய்துகொள்ளல்
- சுற்றுலா கைத்தொழிலை ஊக்குவிக்கும் பொருட்டு ஒரு பயண வழிக்கு 100-150 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட ஆகக்கூடிய கட்டணமொன்றின் மீது தெரிவுசெய்யப்பட்ட பயண அமைவிடங்களை நோக்கி உரிய நேர அட்டவணைக்கமைய உள்நாட்டு விமான பயண சேவைகளை நடைமுறைப் படுத்துவதற்கு உள்நாட்டு விமானசேவைகள் நிறுவனங்களை தெரிவு செய்து குறித்த விமான பயணங்களின் போது ஏற்கநேரிடுகின்ற செலவு மற்றும் வருமானம் என்பவற்றுக்கிடையில் வித்தியாசம் காணப்படுமாயின் அந்த வித்தியாசத்தை ஈடுசெய்வதற்கான நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்து வதற்கு அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, அரசாங்க - தனியார் பங்குடைமைக்கான தேசிய முகவராண்மை யினால் தயாரிக்கப்பட்டுள்ள கட்டமைப்பினுள் தெரிவுசெய்யப்பட்ட விமானசேவை நிறுவனங்களினால் எதிர்வரும் ஆண்டு சார்பில் விரிவான செயற்பாட்டு புள்ளிவிபரங்களுடன் வர்த்தக திட்டத்தினை சமர்ப்பிப்பதன் கீழ் இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகாரசபை இந்த நிறுவனங்களுடன் நிதியீட்டு சாத்திய உடன்படிக்கைகளை செய்துகொள்ளும் பொருட்டு மாண்புமிகு பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வட மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சருமானவரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.