• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-09-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை மகாவலி அபிவிருத்தி சட்டத்தின் 13(18) ஆம் பிரிவிற்கு அமைவாக தாபிக்கப்பட்டுள்ள இலங்கை மகாவலி அதிகாரசபையின் துணைக் கம்பனிகளான Natural Resources Management Services (Pvt.) Ltd., Mahaweli Venture Capital Company (Pvt.) Ltd. மற்றும் Mahaweli Engineering Services (Pvt.) Ltd. ஆகிய கம்பனிகளை கலைத்து மூடுதல்
- இலங்கை மகாவலி அபிவிருத்தி சட்டத்தின் 13(18) ஆம் பிரிவிற்கு அமைவாக தாபிக்கப்பட்டுள்ளதும் தற்போது நடாத்திச் செல்லமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதுமான இலங்கை மகாவலி அதிகாரசபையின் துணைக் கம்பனிகளான Natural Resources Management Services (Pvt) Ltd., Mahaweli Venture Capital Company (Pvt) Ltd. மற்றும் Mahaweli Engineering Services (Pvt) Ltd. ஆகிய கம்பனிகளை கலைத்து மூடும் பொருட்டு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.