• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-09-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
போசாக்கு தொடர்பான பல்துறைசார் செயற்பாட்டுத் திட்டம் 2018 - 2025
- 2010 ஆம் ஆண்டில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள தேசிய போசாக்கு கொள்கைக்கு அமைவாக போசாக்கினை அதிகரிக்கும் செயற்பாட்டிற்கு சுகாதாரம் மற்றும் சுகாதாரம் சாராத துறைகள் அதேபோன்று அரச மற்றும் அரச சார்பற்ற தரப்பினர்களின் தலையீட்டினையும் பங்களிப்பினையும் பெற்றுக் கொள்வதனை உறுதிப்படுத்துதல், சகல விதத்திலுமான மந்தபோசாக்கினை முடிவுக்கு கொண்டுவருதல் அடங்கலாக 2030 ஆம் ஆண்டளவில் நிலைபேறுடைய அபிவிருத்தி இலக்குகளை அடைதல், 2025 ஆம் ஆண்டளவில் 2012 ஆம் ஆண்டில் நடாத்தப்பட்ட உலக சுகாதார மாநாட்டில் உடன்பாடு காணப்பட்ட மந்தபோசாக்கினை இல்லாதொழிப்பதற்கு எடுக்கப்படும் உலகளாவிய முயற்சியினை வெற்றி கொள்வதற்கு பங்களிப்பு நல்குதல் போன்ற முக்கிய நோக்கங்களை நிறைவேற்றுவது அவசியமானதாகும். இதன் பொருட்டு அமைச்சுக்கள், மாகாண சபைகள், மாவட்ட மற்றும் பிராந்திய நிருவாக அதிகாரபீடங்கள், அபிவிருத்தி பங்காளர்கள், உதவி வழங்கும் நிறுவனங்கள், கல்விமான்கள், வர்த்தக சமூகம், சிவில் அமைப்புகள் மற்றும் அரச சார்பற்ற அமைப்புகள் அடங்கலாக பல்தரப்பினர்களின் பங்குபற்றுதலுடன் தயாரிக்கப்பட்ட போசாக்கு தொடர்பான பல்துறைசார் செயற்பாட்டுத் திட்டம் 2018 - 2025 (இரணடாம் கட்டம்) நடைமுறைப்படுத்துவதற்கு கொள்கை உடன்பாட்டினைப் பெற்றுக் கொள்வதற்காக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.