• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-09-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மூன்றாம் நிலை பராமரிப்பு வைத்தியசாலைகளில் குறிப்பாக இருதய நோயைக் கண்டறிதல் மற்றும் சிகிச்சையளித்தல் என்பவற்றுக்குத் தேவையான வசதிகள் மற்றும் உபகரணங்களை மேம்படுத்தும் வகையில் வடிவமைப்பு, கேள்வி நடவடிக்கைகளுக்கு உதவுதல், மேற்பார்வை மற்றும் பயிற்சியளித்தல் தொடர்பில் மதியுரைச் சேவைகளின் பெறுகை
- யப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவராண்மையின் கடன் வசதியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் சுகாதார மற்றும் மருத்துவ சேவை மேம்பாட்டு கருத்திட்டத்தின் மதியுரைச் சேவைகளை Koei Research & Consultancy Inc, Binko International Ltd, மத்திய பொறியியல் உசாத்துணை பணியகம் மற்றும் Philkoei International Inc. கூட்டுத்தொழில் முயற்சிக்கு கையளிக்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.