• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-09-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வீரவில மற்றும் எம்பிலிபிட்டிய துங்கம ஆகிய பிரதேசங்களில் கமத்தொழில் மற்றும் தொழிற்பயிற்சி நிலையமொன்றையும் மஹர சிறைச்சாலையுடன் இணைந்த பெண் சிறைக்கைதிகளுக்கான பயிற்சி நிலையமொன்றையும் தாபித்தல்
- 2019 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட பிரேரிப்புகள் மூலம் உத்தேசிக்கப்பட்டுள்ள Kibbutz வகை இரண்டு (02) பண்ணைகளை அம்பேபுஸ்ஸ மற்றும் வீரவிலை சிறைச்சாலைகளில் தாபிப்பதற்கு பதிலாக வீரவில மற்றும் எம்பிலிபிட்டிய துங்கம ஆகிய சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு சொந்தமான திறந்த சிறைச்சாலைகள் இரண்டில் போதைப் பொருளுக்கு அடிமையாகி சிறையிடப்பட்டவர்களை புனர்வாழ்வளிப்பதற்கான சகல வசதிகளுடனும் கூடிய கமத்தொழில் மற்றும் தொழிற்பயிற்சி நிலையமொன்றை தாபிப்பதற்கும் 2019 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட பிரேரிப்புகள் மூலம் உத்தேசிக்கப்பட்டுள்ள பெண் சிறைக்கைதிகளுக்கான பயிற்சி நிலையமொன்றை தொம்பே பிரதேசத்தில் தாபிப்பதற்கு பதிலாக மஹர சிறைச்சாலைக்கு அண்மையில் வெற்று காணியில் தாபிப்பதற்கும் இந்த கருத்திட்டங்கள் இரண்டிற்குமான நிதி ஏற்பாடுகளை பொதுத் திறைசேரியினால் சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு வழங்கும் பொருட்டும் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.