• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-09-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தண்டனை சட்டக்கோவை மற்றும் 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவைக்குமான திருத்தம்
- தண்டனை சட்டக்கோவை மற்றும் குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவை என்பவற்றுக்கான திருத்தமொன்றாக வெறுப்பைத் தூண்டும் பேச்சு தொடர்பான சட்டத்தினை வரைவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் முன்னர் வழங்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க தயாரிக்கப்பட்ட வரைவு சட்டமூலமானது பாராளுமன்றத்தில் துறைசார் மேற்பார்வை குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், கூறப்பட்ட குழுவின் சிபாரிசுகளுக்கிணங்க சட்டவரைநரினால் தயாரிக்கப்பட்ட புதிய வரைவுச் சட்டமூலத்தினை வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் அதனை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சரினால் செய்யப்பட்ட பிரேரிப்பானது அமைச்சரவை யினால் அங்கீகரிக்கப்பட்டது.