• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-09-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக் கோவை சட்டத்திற்கான திருத்தம்
- 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக் கோவை சட்டத்திற்கான வரைவு (திருத்த) சட்டமூலமானது 2019 ஆம் ஆண்டு யூன் மாதம் 14 ஆம் திகதிய வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர், இவ்வரைவு சட்டமூலத்தினை பரிசீலனை செய்வதற்காக கூடியிருந்த துறைசார் மேற்பார்வை குழுவானது சில திருத்தங்களை பிரேரித்துள்ளதுடன் இத்திருத்தங்களை குழுநிலை திருத்தங்களாக சட்டவரைநர் வரைந்துள்ளார். முன்னர் அமைச்சரவையினால் வழங்கப்பட்ட தீர்மானத்தினை கவனத்திற் கொண்டு, சட்டமூலமொன்றின் பிரதான பகுதியை பாதிக்கும் குழுநிலை திருத்தங்களானவை, அவற்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு முன்னதாக அங்கீகாரத்தின் பொருட்டு அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும். அதற்கிணங்க நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சரினால் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்ட கூறப்பட்ட குழுநிலை திருத்தங்களும் 2019 ஆம் ஆண்டு யூன் மாதம் 14 ஆம் திகதிய வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட வரைவு சட்டமூலமும் அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டன.