• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-09-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
'வீதி பாதுகாப்பிற்கான தேசிய சபை' என்பதை 'தேசிய போக்குவரத்து பாதுகாப்பிற்கான ஆணைக்குழு' என்னும் பெயரில் தாபித்தல்
- 1998 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க மோட்டார் போக்குவரத்து (திருத்த) சட்டத்தினால் 17 உறுப்பு நிறுவகங்களை உள்ளடக்கிய 'சபை' ஒன்றாக தாபிக்கப்பட்ட 'வீதி பாதுகாப்பிற்கான தேசிய சபையை' அதிகாரமிக்கதும் சட்டரீதியானதுமான நிறுவனமொன்றாக தாபிக்கப்படவேண்டிய தேவை இனங்காணப்பட்டுள்ளது. அதற்கிணங்க, வீதி பாதுகாப்பிற்கான தேசிய சபையை 'தேசிய போக்குவரத்து பாதுகாப்பிற்கான ஆணைக்குழு' என்னும் பெயரில் முறைசார் சட்ட கட்டமைப்பொன்றுக்குள் அதிகாரமிக்க நிறுவகமொன்றாக தாபிக்கும் பொருட்டும் கூறப்பட்ட சபையை தாபிப்பதற்கு பொருத்தமான சட்டத்தினை வரையுமாறு சட்டவரைநருக்கு அறிவுறுத்தும் பொருட்டும் போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சரினால் சமர்ப்பிக் கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.