• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-09-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இரத்தினபுரி புதிய நகரத்தில் அமைந்துள்ள காணித் துண்டுகளை சப்பிரகமுவ மாகாண சுகாதார பயிற்சி நிலையத்தினை நிர்மாணிப்பதற்காக குறித்தொதுக்குதல்
- இரத்தினபுரி புதிய நகரத்தில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான 3 ரூட் 1.5 பேர்ச்சர்ஸ் விஸ்தீரணம் கொண்ட இரு காணித் துண்டுகளை சப்பிரகமுவ மாகாண சுகாதார பயிற்சி நிலையத்தினை நிர்மாணிப்பதற்காக அரசாங்க விலைமதிப்பீட்டாளரின் விலைமதிப்பான 30 மில்லியன் ரூபாவினை செலுத்துவதற்கு உட்பட்டு, சப்பிரகமுவ மாகாண சபையின் மாகாண சுகாதார திணைக்களத்திற்கு குறித்தொதுக்குவதற்கு இயலுமாகும் வகையில் காணி ஆணையாளர் அதிபதிக்கு விடுவிக்கும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.