• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-09-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2019 ஆம் ஆண்டில் மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சுக்கு வழங்கப்பட்ட நிதி ஏற்பாடுகளை பயன்படுத்தி அபிவிருத்தி கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்
- 2019 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்த்திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஏற்பாட்டினைப் பயன்படுத்தி மதிப்பீட்டுத் தொகையான 20 மில்லியன் ரூபாவை விஞ்சிய 'சேருவாவில அபிவிருத்தி - கட்டம் II', யாழ்ப்பாணம் நகர அபிவிருத்தி - வசுத்தரிப்பு நிலையம் - கட்டம் II', 'வெலிகந்த நகர விருத்தி', 'எலுவன்குளம - அருவக்காடு வீதி விருத்தி' மற்றும் 'அத்திடிய சிறுவர் இல்லம் - கட்டம் II', ஆகிய ஐந்து கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.