• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-09-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அம்பாறை மாவட்ட பொது வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை சேவை பிரிவு சார்பில் கட்டடமொன்றை நிர்மாணித்தல்
- அம்பாறை மாவட்ட பொது வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை சேவை வசதிகளை வழங்கும் துரித அவசரத் தேவையைக் கருதி இந்த வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை சேவை பிரிவு சார்பில் இரண்டு மாடி கட்டடமொன்றை நிர்மாணிக்கும் ஒப்பந்தத்தை உடன்பயனாகு அடிப்படையில் நிர்மாணிப்பதற்காக மத்திய பொறியியல் உசாத்துணை பணியகத்திற்கு கையளிக்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.