• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-09-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கண்டி, நுவரவெல விளையாட்டரங்கம் மற்றும் வர்த்தக கட்டடத் தொகுதியை நிர்மாணிப்பதற்காக 121 மில்லியன் ரூபாவைக் கொண்ட நிதி ஏற்பாட்டினை ஒதுக்கிக் கொள்வதற்கு அங்கீகாரம் பெற்றுக் கொள்ளல்
- மாநகர சபை அதிகார பிரதேசம் மற்றும் கங்கவட்டகோரளைய பிரதேச சபை அதிகாரப் பிரதேசம் என்பவற்றில் வசிக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல், கண்டி நகரத்தில் நிலவும் வாகன நெரிசலை குறைத்தல், மாநகர சபையின் வருமானத்தை அதிகரித்தல், பிரதேச மக்களின் கமத்தொழில் உற்பத்திகளை முதன்மையாகக் கொண்டு ஏனைய உற்பத்திகளுக்கு சிறந்த விலையினைப் பெற்றுக் கொடுத்தல் அத்துடன் நுகர்வோருக்கு மிகச் சிறந்த சந்தை வசதிகளை வழங்குதல் போன்ற வசதிகளை செய்யும் விதத்தில் கண்டி மாநகர சபை அதிகார பிரதேசத்தினுள் கண்டி மாநகர சபையின் மேற்பார்வையின் கீழ் 121 மில்லியன் ரூபாவைக் கொண்ட நிதி ஏற்பாட்டினை திரட்டிய நிதியத்திலிருந்து பயன்படுத்தி நுவரவெல விளையாட்டரங்கம் மற்றும் வர்த்தக கட்டடத் தொகுதியை நிர்மாணிக்கும் பொருட்டு அரசாங்க தொழில்முயற்சிகள், மலைநாட்டு மரபுரிமைகள் மற்றும் கண்டி நகர அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.