• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-09-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இரண்டாவது ஒன்றிணைந்த வீதி முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவி
- வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் மேல் மாகாணங்களில் அண்ணளவாக கிராமிய நுழைவு பாதைகள் 3,400 கிலோ மீற்றரையும் தேசிய நெடுஞ்சாலைகள் 340 கிலோ மீற்றரையும் செப்பனிடுதல், பராமரித்தல், வீதி பாதுகாப்பு, கண்காணிப்பு மற்றும் வீதி வடிவமைப்பு, நிர்மாணிப்பு ஆகிய துறைகளின் ஆற்றலை விருத்தி செய்வதற்காக இரண்டாவது ஒன்றிணைந்த வீதி முதலீட்டு நிகழ்ச்சித் திட்டத்திற்கு மொத்த கடன் தொகை 900 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை நிதி வசதியினை கட்டம் கட்டமாக பெற்றுக் கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் பிரேரிப்பு நிதியிடல் உடன்படிக்கையொன்றைச் செய்து கொண்டுள்ளது. 2023 ஆம் ஆண்டளவில் பூர்த்தி செய்வதற்கு எதிர்பார்த்துள்ள மொத்த முதலீட்டு செலவு 171.8 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களாவதோடு, இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் இரண்டாவது கட்டத்திற்கு 150 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட கடன் தொகையொன்று ஆசிய அபிவிருத்தி வங்கியின் சாதாரண பொது மூலதன நிதியத்திலிருந்து பெற்றுக் கொள்ளும் பொருட்டு இந்த வங்கியுடன் கடன் உடன்படிக்கையொனறைச் செய்து கொள்வதற்கு நிதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.