• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-09-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மொரகஹந்த - களுகங்கை அபிவிருத்திக் கருத்திட்டத்தினால் பாதிக்கப்படும் காணி உரிமையாளர்களிடமிருந்து சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்காக மதிப்பீட்டு பெறுமதிகளுக்கு மேலதிகமாக கொடுப்பனவொன்றை நட்டஈடாக செலுத்துதல்
- மொரகஹந்த - களுகங்கை அபிவிருத்திக் கருத்திட்டத்தின் பணிகளை ஆரம்பிக்கும் போது ஏற்பட்ட நீண்ட காலதாமதம், கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் நிலவிய ஐயப்பாடான நிலைமை என்பன காரணமாக கருத்திட்ட பிரதேசத்தினுள் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் அதற்கு அண்மித்த பிரதேசங்களுக்கு ஒருங்கிணைவாக அபிவிருத்தியடையாமை மற்றும் கருத்திட்ட பிரதேசத்தைச் சேர்ந்த குடியிருப் பாளர்கள் அவர்களுடைய வீடுகளை பழுதுபார்க்காமை என்பவற்றினால் கருத்திட்டத்திற்காக சுவீகரிக்கப்பட்ட சொத்துக்கள் சார்பில் மதிப்பிடப்பட்ட நட்டஈடு தொகை குறைவடைந்தமையை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு லக்கல மற்றும் நாவுல பிரதெச செயலக பிரிவுகளில் நிரந்தர குடியிருப்பினை கொண்டிருந்து கருத்திட்டம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு 50 சதவீதம் கொண்ட மேலதிக நட்டஈடொன்றை செலுத்துவதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது. ஆதலால், உரிய மீளாய்வுக் குழுவின் அறிக்கையில் உள்ளடக்கப்படாத இந்தக் கருத்திட்டம் காரணமாக பாதிக்கப்பட் டதாக பின்னர் தீர்மானிக்கப்பட்ட மெதிரிகிரிய பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த குடும்பங்களுக்கும் இந்த 50 சதவீத மேலதிக நட்டஈட்டினை வழங்கும் பொருட்டு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சரினால் சமர்ப் பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.