• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-09-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கமத்தொழில் துறை நவீனமயப்படுத்தல் கருத்திட்டம் - கமத்தொழில் தொழிநுட்ப மாதிரி பூங்காக்களை வடிவமைத்து தாபித்து, நடைமுறைப்படுத்தி, முகாமித்து கருத்திட்டத்தின் ஊடாக உதவி பெறும் கமத்தொழில் உற்பத்தி அமைப்புகளுக்கு கையளிக்கும் பொருட்டு மதியுரைச் சேவையினை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை கையளித்தல்
- உலக வங்கியின் நிதியிடலின் கீழ் செயற்படுத்தப்படும் கமத்தொழில் துறை நவீனமயப்படுத்தல் கருத்திட்டத்தின் கீழ் கமத்தொழில் தொழிநுட்ப மாதிரி பூங்காக்களை வடிவமைத்து தாபித்து, நடைமுறைப்படுத்தி, முகாமித்து அவற்றை கருத்திட்டத்தின் ஊடாக உதவி பெறும் கமத்தொழில் உற்பத்தி அமைப்புகளுக்கு கையளிக்கும் பணிகளை நிறைவேற்றுவதற்கான மதியுரைச் சேவையினை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை நியுசிலாந்தின் M/s FCG ANZDEC Ltd., மற்றும் சுவீடன் FCG Swedish Development AB ஆகிய கம்பனிகளைக் கொண்ட கூட்டுத் தொழில்முயற்சிக்கு கையளிக்கும் பொருட்டு கமத்தொழில், கிராமிய பொருளாதார அலுவல்கள், நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.