• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-09-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கட்டாய பயிர்செய்கை காப்புறுதி நோக்கத்திற்காக 2019 / 2020 பெரும்போகம் மற்றும் 2020 சிறுபோகம் என்பன சார்பில் மீள் காப்புறுதி காப்பீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்தல்
- இயற்கை அனர்த்தத்தின் போது இழப்பீடுகளுக்கான நட்டஈடு செலுத்துவதற்காக அரசாங்கத்திற்கும் கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதி சபைக்கும் ஏற்க நேருடுகின்ற நிதி ரீதியிலான இடர்களை குறைப்பதற்கு மீள் காப்புறுதி வேலைத்திட்ட மொன்றில் சேர்வதற்கு 2018 ஆம் ஆண்டில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கிணங்க, கட்டாய பயிர்செய்கை காப்புறுதியினை மிக பயனுள்ள வகையில் நடைமுறைப்படுத்துவதற்கு 2019 / 2020 பெரும்போகம் மற்றும் 2020 சிறுபோகம் என்பன சார்பில் கட்டாய பயிர்ச்செய்கைகளுக்கு உரிய கொள்வனவு வழிமுறைகளுக்கு உட்பட்டு, மீள் காப்புறுதி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் நோய், பீடைகள் மற்றும் வனவிலங்குகளினால் பயிர்களுக்கு ஏற்படும் சேதம் சார்பில் ஏற்ற காப்புறுதி தவணைத் தொகையொன்றை விவசாயிகளிடமிருந்து அறவிட்டுக் கொள்வதற்கு உட்பட்டு, பயிர் காப்புறுதி காப்பீட்டினை விரிவுபடுத்துவதற்கும் இந்த காப்பீட்டினையும் மீள் காப்புறுதி காப்பீட்டில் சேர்ப்பதற்குமாக கமத்தொழில், கிராமிய பொருளாதார அலுவல்கள், நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.