• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-09-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தங்கொட்டுவ நீர்வழங்கல் கருத்திட்டம்
- புத்தளம் மாவட்டத்தில் அமைந்துள்ள துரிதமாக அபிவிருத்தியடைந்துவரும் துணை நகரங்களாக இனங்காணப்பட்டுள்ள வென்னப்புவ, தங்கொட்டுவ மற்றும் நாத்தாண்டிய பிரதேசங்களில் நீர்வழங்கலை விருத்தி செய்வதற்கு தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்பு சபையினால் தங்கொட்டுவ நீர்வழங்கல் கருத்திட்டமானது திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தை பெல்ஜியம் M/s BESIX.S.A. நிறுவனத்திற்கு 28 மில்லியன் யூரோக்கள் உட்பட 5,004 மில்லியன் ரூபா கொண்ட தொகைக்கு கையளிக்கும் பொருட்டு நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.