• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-09-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஐக்கிய நாடுகள் அமைப்பின் பாதுகாப்புச் சபையின் 1540 ஆம் பிரேரிப்பை இலங்கையில் நடைமுறைப்படுத்துதல்
- ஐக்கிய நாடுகள் அமைப்பின் பாதுகாப்புச் சபையின் 1540 ஆம் பிரேரிப்புக்கு அமைவாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் உறுப்பு நாடுகள் யாவும் ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்கு, உடைமையில் வைத்திருப்பதற்கு, வழங்குவதற்கு, கொண்டு செல்வதற்கு மற்றும் பயன்படுத்துவதற்கு முயற்சிக்கும் அரச சார்பற்ற செயற்பாட்டாளர்களுக்கு இது சம்பந்தமாக எந்தவித ஒத்துழைப்பினையும் வழங்காதிருத்தல் வேண்டும். இதற்கிணங்க, உயிர் சேத ஆயுதங்கள், மற்றும் இது சார்ந்த பொருட்களின் ஏற்றுமதி, மீள் ஏற்றுமதி, கொண்டு செல்லல், கப்பல்களுக்கு மாற்றுதல் அதேபோன்று இத்தகைய பணிகளில் ஈடுபடுகின்றவர்களின் போக்குவரத்து மற்றும் இடைமாற்றல் நடவடிக்கைகள் நாட்டிலிருந்து அல்லது நாட்டிற்கு ஊடாக மேற்கொள்தல் சம்பந்தமான சட்டங்கள் மற்றும் ஏற்பாடுகளை தயாரிப்பது காலத்தின் தேவையாகும் என்பதனால் இந்த தேவைகளுக்கு ஏற்ற விதத்தில் ஐரோப்பிய ஒன்றித்தின் யுத்த உபகரண பட்டியல் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் இரட்டைப் பாவனை கட்டுப்பாட்டு பட்டியல் ஆகியவற்றை பயன்படுத்தி இலங்கைக்கு ஏற்ற விதத்திலான மாற்றங்களை செய்து தேசிய கட்டுப்பாட்டு பட்டியலொன்றை ஒரு வருட காலத்திற்குள் தயாரிப்பதற்கும் 1540 ஆம் பிரேரிப்பை நடைமுறைப்படுத்துவதற்காக 2017 10 06 ஆம் திகதியிடப்பட்டதும் 2039/31 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்மானி அறிவித்தலிலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் சட்டங்களை மாற்றுவதற்கான திருத்தங்களை வரையும் பொருட்டும் அபிவிருத்தி திறமுறை மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.