• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-09-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
“People of Sri Lanka” நூலிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட 10 இனங்கள் குறித்து 10 ஆவண படங்களைத் தொகுத்தல்
- “People of Sri Lanka” என்னும் நூலை அடிப்படையாகக் கொண்டு சினிமாத் துறை வல்லுநரான திரு.பேர்ட்றம் நிஹாலினால் தயாரிக்கப்படவுள்ள இனங்கள் தொடர்பான ஆவண படங்களின் பிரதிகளை ஆய்வு செய்யும் பணிகளை முறையான குழுவொன்றின் அங்கீகாரத்தினை பெற்றுக் கொள்வதற்கு உட்பட்டு, உரிய பணியினை தொடர்வதற்கு அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க 05 நிபுணர்களைக் கொண்ட குழுவொன்றை வளவாளர்களாக இணைத்துக் கொள்ளும் பொருட்டு தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக முன்னேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.