• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-09-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஆசிய பசுபிக் வலயத்தின் ஒன்றிணைந்த கிராமிய அபிவிருத்தி நிலையத்தின் நிருவாக சபை மற்றும் நிறைவேற்றுக் குழு கூட்டம் - 2019
- ஆசிய பசுபிக் வலயத்தின் ஒன்றிணைந்த கிராமிய அபிவிருத்தி நிலையத்தின் நிருவாக சபை கூட்டமானது 2019 ஒக்ரோபர் மாதம் 08 ஆம் 09 ஆம் திகதிகளிலும் நிறைவேற்றுக்குழு கூட்டம் 2019 ஒக்ரோபர் மாதம் 11 ஆம் திகதியன்றும் இலங்கையில் நடாத்தப்படவுள்ளன. இதற்கிணங்க, கமத்தொழில், கிராமிய பொருளாதார அலுவல்கள், நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட இந்தக் கூட்டத்திற்கான மதிப்பிடப்பட்ட செலவு அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.