• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-09-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
முத்துராஜவெல கைத்தொழில் வலயத்திலுள்ள இலங்கை காணி நிலமீட்பு, அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான ஏக்கர் 13 றூட் 01 பேர்ச்சர்ஸ் 0.95 விஸ்தீரணம் கொண்ட காணித் துண்டொன்றை M/s. CA Crushing (Pvt.) Ltd., கம்பனிக்கு குத்தகைக்களித்தல்
- வௌி சுற்றுவட்ட அதிவேகப்பாதை கருத்திட்டத்தின் பணிகள் தற்போது முடிவடையும் மட்டத்தில் உள்ளன. இதற்கமைவாக இந்தக் கருத்திட்டத்தின் ஒப்பந்த கம்பனியான Metallurgical Corporation of China Ltd., கம்பனிக்கு கருத்திட்டத் தேவைகள் சார்பில் வருடாந்த குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டிருந்த முத்துராஜவெல கைத்தொழில் வலயத்திலுள்ள இலங்கை காணி நிலமீட்பு, அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான ஏக்கர் 13 றூட் 01 பேர்ச்சர்ஸ் 0.95 விஸ்தீரணம் கொண்ட காணித் துண்டொன்றை இந்தக் கருத்திட்டத்திற்கு மணல் மற்றும் வீதி நிர்மாணிப்புக்குத் தேவையான கல் வழங்கும் M/s. CA Crushing (Pvt.) Ltd., கம்பனிக்கு மத்திய சுற்றாடல் அதிகாரசபையினதும் உரிய ஏனைய நிறுவனங்களினதும் அங்கீகாரத்தினை பெற்றுக் கொள்வதற்கு உட்பட்டு, 30 வருட காலத்திற்கு குத்தகைக்களிக்கும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.