• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-09-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரசாங்க / தனியார் பங்குடமையின் மூலம் கொழும்பு துறைமுக நகரத்தினுள் நிரப்பப்பட்ட அரசாங்கத்திற்கு சொந்தமான காணியில் கண்காட்சி மற்றும் மாநாட்டு மண்டபம், சர்வதேச பாடசாலை மற்றும் வைத்தியசாலைகள் போன்ற துரித அபிவிருத்தி நோக்கங்களுக்காக திறமுறை முதலீட்டாளர்களை கண்டறியும் பிரேரிப்பு
- புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கொழும்பு துறைமுக நகரத்தில் காணி நிரப்பும் பணிகள் ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்டுள்ளதோடு, இது தொடர்பில் அங்கீகரிக்கப்பட்ட பிரதான அபிவிருத்தி திட்டம் மற்றும் அபிவிருத்தி கட்டுப்பாட்டு ஒழுங்குவிதிகள் என்பவற்றுக்கு அமைவாக அரசாங்க / தனியார் பங்குடமைக்கான தேசிய முகவராண்மையின் ஒத்தாசையுடன் இந்த காணியில் நிர்மாணிக்கப்படவுள்ள சருவதேச பாடசாலை, அதன் அருகாமையில் மாநாட்டு ஹோட்டல் என்பவற்றுக்கு முதலீடு செய்யும் மாற்று வழியுடன் கண்காட்சி மற்றும் மாநாட்டு மண்டபம், மற்றும் வைத்தியசாலை சார்பில் முதலீட்டாளர் களிடமிருந்து பிரேரிப்புகளை கோருவதற்கும் இந்தப் பிரேரிப்புகளை கொள்வனவு வழிமுறைக்கு அமைவாக மீளாய்வு செய்வதற்குமாக இணக்கப்பேச்சுக் குழுவொன்றையும் கருத்திட்டக் குழுவொன்றையும நியமிப்பதற்கும் மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.