• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-09-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தைத் திருத்துதல்
- உயர்கல்வி நிறுவனங்களைத் தாபித்தல், பராமரித்தல், நிருவகித்தல் என்பன பொருட்டிலான 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டமானது அண்மைக்கால அபிவிருத்திகளுடன் தனியார் உயர்கல்வி நிறுவனங்களை பயனுள்ள வகையில் ஒழுங்குறுத்தும் பொருட்டு பலமிக்க சட்ட கட்டமைப்பொன்றை வழங்கும் விதத்தில் திருத்த வேண்டிய தேவையுள்ளது. நிபுணர்கள் குழுவொன்றினால் இது சம்பந்தமாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள கருதுகோள் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் சம்பந்தமாக நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சின் செயலாளரின் தலைமையில் நியமிக்கப்பட்ட உத்தியோகத்தர் குழுவினால் செய்யப்பட்டுள்ள அறிக்கையிலுள்ள சிபாரிசுகளுக்கு அமைவாக இந்த சட்டத்தை திருத்தும் பொருட்டு மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.