• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-09-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
களனி வலது கரை நீர்வழங்கல் கருத்திட்டம் - கட்டம் II
- களினி, வத்தளை, மஹர, பியகம, ஜா-எல அதேபோன்று சர்வதேச விமான நிலையம், சுதந்திர வர்த்தக வலயம் மற்றும் விமானப்படை முகாம் என்பன உள்ளடக்கப்பட்ட கட்டுநாயக்க பிரதேசத்திற்கான நீர் வழங்கலின் பொருட்டு தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்பு சபையினால் நடைமுறைப்படுத்தப்படும் களனி வலது கரை நீர்வழங்கல் கருத்திட்டத்தின் II ஆம் கட்டத்திற்கான கால எல்லையை 2020 யூன் மாதம் 22 ஆம் திகதிவரை நீடிக்கும் பொருட்டு நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.