• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-09-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
போக்குவரத்து குற்றங்கள் பற்றிய தரவு மற்றும் தகவல் முகாமைத்துவம், உடன் தண்டப்பணம் அறவிடல் மற்றும் சாரதிகளுக்கான தண்டப்புள்ளிகள் முறைமை என்பவற்றை நடைமுறைப்படுத்துவதற்காக விரிவான இணைந்த இலத்திரனியல் தீர்வொன்றினை அமுல்படுத்துதல்
- போக்குவரத்து குற்றங்கள் பற்றிய தரவு மற்றும் தகவல் முகாமைத்துவம், உடன் தண்டப்பணம் அறவிடல் மற்றும் சாரதிகளுக்கான தண்டப்புள்ளிகள் முறைமை என்பவற்றை நடைமுறைப்படுத்துவது சம்பந்தமாக விரிவான ஒருங்கிணைந்த மின்னணு தீர்வினை செயற்படுத்துவது குறித்து நிதி அமைச்சின் கீழ் தாபிக்கப்பட்டுள்ள அரசாங்க - தனியார் ஒத்துழைப்புக்கான தேசிய முகவராண்மையின் அவதானிப்புரைகளும் சிபாரிசும் உள்ளடக்கப்பட்ட அறிக்கை யினை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவையினால் கொள்கை ரீதியில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க செய்யப்பட வேண்டிய சாத்தியத்தகவாய்வினை பேராதனை பல்கலைக்கழகத்தினால் முன்வைக்கப் பட்டுள்ள பிரேரிப்பின் பிரகாரம் 22.2 மில்லியன் ரூபாவைக் கொண்ட (வரியற்ற) மதிப்பீட்டுத் தொகைக்கு அவர்களினால் மேற்கொள்வதற்கு பாதுகாப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.