• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-08-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தொழிற்பயிற்சி மற்றும் இளைஞர் அபிவிருத்தி தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
- மாலைதீவு அரசாங்கத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் தொழிற்பயிற்சி மற்றும் இளைஞர் அபிவிருத்தி தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கையினை செய்து கொள்ளும் பொருட்டும் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கு மாலைதீவு குடியரசிலுள்ள இலங்கை தூதுவருக்கு அதிகாரத்தினை கையளிப்பதற்குமாக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.