• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-08-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை புகையிரத சேவை சார்பில் 5000 தண்டவாளங்களை கொள்வனவு செய்தல்
- இலங்கை புகையிரத சேவை சார்பில் EN 45 E1 (45' 00") R 260 - EN13674 வகை 5000 தண்டவாளங்களை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் மீது 2,320,230 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட தொகைக்கு M/s. Angang Group International Panzhihua Co. Ltd., கம்பனிக்கு வழங்கும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.