• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-08-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஆசிய அபிவிருத்தி வங்கி கடன் உதவி வழங்கும் நிலைபேறுடைய நகர அபிவிருத்திக் கருத்திட்டத்தின் பொதி 02: குருநாகல், இரத்தினபுரி, தம்புள்ளை மற்றும் திருகோணமலை ஆகிய நகரங்களில் நகர வசதிகளை மேம்படுத்துதல், மரபுரிமைகளைப் பாதுகாத்தல், திறன் அபிவிருத்தி என்பவற்றுக்கான திட்டமிடல், விரிவான வடிவமைப்பு மற்றும் கொள்வனவு பணிகளை மேற் கொள்தல் என்பன பொருட்டு மதியுரைஞர்களை இணைத்துக் கொள்வதற்கான ஒப்பந்தங்களை வழங்குதல்
- நிலைபேறுடைய நகர அபிவிருத்திக் கருத்திட்டத்தின் பொதி 02: குருநாகல், இரத்தினபுரி, தம்புள்ளை மற்றும் திருகோணமலை ஆகிய நகரங்களில் நகர வசதிகளை மேம்படுத்துதல், மரபுரிமைகளைப் பாதுகாத்தல், திறன் அபிவிருத்தி என்பவற்றுக்கான விரிவான திட்டமிடல் மற்றும் கொள்வனவு பணிகள் சார்பிலான மதியுரை ஒப்பந்தத்தை ஆசிய அபிவிருத்தி வங்கியின் உடன்பாட்டுடனும் அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட மதியுரைக் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் மீது Engineering consultants Ltd., Sri Lanka (Lead consultants) JV with KEIOS Srl Development Consulting, Italy கம்பனிக்கு கையளிக்கும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.