• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-08-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஆசிய அபிவிருத்தி வங்கி கடன் உதவி வழங்கும் நிலைபேறுடைய நகர அபிவிருத்திக் கருத்திட்டத்தின் பொதி 01: குருநாகல், இரத்தினபுரி, தம்புள்ளை மற்றும் திருகோணமலை ஆகிய நகரங்களில் வாகன நெரிசல் மற்றும் போக்குவரத்து என்பவற்றை கட்டுப்படுத்துவதற்கான திட்டமிடல், விரிவான வடிவமைப்பு மற்றும் கொள்வனவு பணிகளை மேற்கொள்தல் என்பன பொருட்டு மதியுரைஞர்களை இணைத்துக் கொள்வதற்கான ஒப்பந்
- நிலைபேறுடைய நகர அபிவிருத்திக் கருத்திட்டத்தின் பொதி 01 இன் கீழ் குருநாகல், இரத்தினபுரி, தம்புள்ளை மற்றும் திருகோணமலை ஆகிய நகரங்களில் வாகன நெரிசல் மற்றும் போக்குவரத்து என்பவற்றை மேம்படுத்துவதற்கான விரிவான திட்டமிடல் மற்றும் கொள்வனவு பணிகள் சார்பிலான மதியுரை ஒப்பந்தத்தை ஆசிய அபிவிருத்தி வங்கியின் உடன்பாட்டுடனும் அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட மதியுரைக் கொள்வனவுக் குழுவின் சிபாரிசுகளின் மீது SMEC International Pvt. Ltd., Australia JV with Surbana Jurong Infrastructure Pte. Ltd. (SJIPL)., Singapore and Sub-consultants as Resources Development Consultants Ltd. and Master Hellies's Engineering Consultants (Pvt.) Ltd., Sri Lanka கம்பனிக்கு கையளிக்கும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.