• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-08-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கைக்கும் ஹங்கேரிக்கும் இடையிலான இருதரப்பு விமானசேவைகள் உடன்படிக்கை
- 2014 ஆம் ஆண்டில் இந்தோனேஷியா பாளியில் நடாத்தப்பட்ட சருவதேச சிவில் விமானசே​வைகள் இணக்கப்பேச்சு மாநாட்டின் போது இலங்கைக்கும் ஹங்கேரி அரசாங்கத்திற்கும் இடையில் விமானசேவைகள் திட்டமிடல் பற்றி இரு நாடுகளினதும் விமானசேவைகள் அதிகாரிகளினால் கலந்துரையாடி தயாரிக்கப்பட்டுள்ள வரைவு உடன்படிக்கைக்கு இரு நாட்டு உத்தியோகத்தர்களினாலும் உடன்பாடு காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக, இலங்கைக்கும் ஹங்கேரி அரசாங்கத்திற்கும் இடையில் சுருக்க ஒப்பம் இடப்பட்ட இந்த விமானசேவைகள் உடன்படிக்கையை இலங்கை அரசாங்கத்தின் அதிகாரம்பெற்ற பிரதிநிதியொருவரினால் கைச்சாத்திடுவதற்கும் அதன்பின்னர் உடன்படிக்கையை பயனுள்ள வகையில் நடைமுறைப்படுத்து வதற்கு பொருத்தமான நடவடிக்கை எடுக்கும் பொருட்டும் போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.