• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-08-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
குறைந்த வருமானம் பெறும் ஆட்களுக்கு சீன உதவி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 2000 வீட்டு அலகுகளை நிர்மாணித்தல்
- குறைந்த வருமானம் பெறும் ஆட்களுக்கு சீன உதவி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 2000 வீட்டு அலகுகளை நிர்மாணிப்பதற்காக மானியமொன்றை வழங்குவதற்கு சீன அரசாங்கம் இணங்கியுள்ளது. அதற்கிணங்க, இந்த நோக்கம் கருதி, மொரட்டுவை, பேலியகொடை, திம்பிரிகஸ்யாய மற்றும் மஹரகம பிரதேச செயலகப் பிரிவுகளில் வேலைத் தளங்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன், நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு உரித்தளிக்கப்பட்ட பேலியகொடை மற்றும் மஹரகம ஆகிய பிரதேசங்களிலுள்ள காணி பரப்புக்கள் நிர்மாணத்திற்காக தயார்படுத்தப்பட்டுள்ளன. அதற்கிணங்க திம்பிரிகஸ்யாய பிரதேச செயலகப் பிரிவிற்குள் உள்ள தெமட்டகொடயிலுள்ள டொக்டர்.டெனிஸ்டர் த சில்வா மாவத்தையில் அமைந்துள்ள 02 ஏக்கர் 01 றூட் 03.77 பேர்ச்சர்ஸ் விஸ்தீரணம் கொண்ட எலுமடுவ வத்த என அழைக்கப்படும் அரச காணியை அரச காணி கட்டளைச் சட்டத்தின் கீழ் இலவசக் கொடையொன்றாக நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு உரித்தளிப்பதற்கும், மொரட்டுவை பிரதேச செயலகப் பிரிவிற்குள் உள்ள தெலவல வீதியில் அமைந்துள்ள 03 ஏக்கர் 03 றூட் 08.84 பேர்ச்சர்ஸ் விஸ்தீரணம் கொண்ட வடரி வத்த என அழைக்கப்படும் காணியை கொள்வனவு செய்வதற்கும் அத்துடன் கூறப்பட்ட காணிகளை அபிவிருத்தி செய்வதற்குமான ஏற்பாட்டினை பெற்றுக் கொள்வதற்கும் தேவையான நிதி ஏற்பாட்டினைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.