• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-08-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
LED மின் குமிழ்கள் (Light emitting diode) சார்பில் வலுசக்தி செயற்திறன் தரங்கள்
- சனாதிபதி செயலணியின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படும் வலுசக்தி கேள்விப் பக்க முகாமைத்துவ நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ், மின்சார சாதனங்களின் வினைத்திறனான பயன்பாட்டை மேம்படுத்துவதற்கென செயற்திறன் தரங்கள் வெவ்வேறாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதற்கிணங்க, இந்த நாட்டில் பயன்படுத்தப்பட்டுவரும் LED மின் குமிழ்களுக்குத் தேவைப்படும் ஆகக்குறைந்த செயற்திறன் தரங்களை அறிமுகப்படுத்துவதற்கும் அவற்றின் தரத்தை மேம்படுத்துவதற்கும் இலங்கை நிலைபேறான வலுசக்தி அதிகாரசபை சட்டத்தின் 67 ஆம் பிரிவின் கீழ் ஒழுங்குவிதிகளை அறிமுகப்படுத்துவதற்கும், கூறப்பட்ட ஒழுங்குவிதிகளை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் அவற்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் மின்வலு, வலுசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.