• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-08-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2011 ஆம் ஆண்டின் 42 ஆம் இலக்க நிதித் தொழில் சட்டத்தின் 33 ஆம் பிரிவின் கீழ் உரிமம் அளிக்கப்பட்டுள்ள நிதிக் கம்பனியொன்றினை கலைத்து மூடும் போது உரிமை கோரிக்கைகளுக்கு முன்னுரிமை தொடர்பிலான ஒழுங்குவிதி
- உரிமம் அளிக்கப்பட்டுள்ள நிதிக் கம்பனி யொன்றை கலைத்து மூடும் செய்முறைக்கு உதவும் பொருட்டு 2011 ஆம் ஆண்டின் 42 ஆம் இலக்க நிதித் தொழில் சட்டத்தின் 33 ஆம் பிரிவின் கீழ் வரையப்பட்ட, இலங்கை மத்திய வங்கியின் நாணய சபையினால் அங்கீகரிக்கப்பட்ட உரிமம் அளிக்கப்பட்டுள்ள நிதிக் கம்பனியொன்றினை கலைத்து மூடும் போது உரிமை கோரிக்கைகளுக்கான முன்னுரிமை தொடர்பிலான ஒழுங்குவிதிகளானவை 2019‑05-31 ஆம் திகதிய 2125/58 ஆம் இலக்க வர்த்தமானியில் (அதிவிசேட) நிதி அமைச்சரின் கையொப்பதுடன் பிரசுரிக்கப்பட்டுள்ளன. அதற்கிணங்க, கூறப்பட்ட வர்த்தமானியை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டு நிதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.