• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-08-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வரிச் சட்டங்களைத் திருத்துதல்
- 2019 ஆம் ஆண்டின் தேசிய வரவுசெலவுத்திட்டத்தில் முன்மொழியப்பட்ட வரி பிரேரிப்புகளை நடைமுறைப்படுத்துவதற்கும் அத்துடன் உரிய அக்கறைதாரர்களினால் அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல்கள் மற்றும் கோரிக்கைகளில் இனங்காணப்பட்ட திருத்தங்களை உள்ளடக்குவதற்கும் 2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க பெறுமதிசேர்க்கப்பட்ட வரிச் சட்டம், 2009 ஆம் ஆண்டின் 9 ஆம் தேசத்தை கட்டியெழுப்பும் வரிச் சட்டம், 2006 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க பொருளாதார சேவைக் கட்டணச் சட்டம், 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டம், நிதிச் சட்டம் மற்றும் 1988 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க பந்தய மற்றும் சூதாட்ட வரிச் சட்டம் ஆகியவற்றுக்குத் தேவையான திருத்தங்களை செய்யும் பொருட்டு நிதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.