• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-08-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கடன் ஒழுங்குறுத்துகை அதிகாரசபையை தாபித்தல்
- 2016 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க நுண்நிதிச் சட்டத்திலிருந்து எதிர்பார்க்கப்படும் நோக்கங்களை நிறைவேற்றும்போது எழுந்த நடைமுறைப் பிரச்சினைகள் காரணமாக, வாடிக்கையாளர் பாதுகாப்பினையும் சந்தையை கையாளும் ஒழுங்குறுத்தலையும் உள்ளடக்கும் விதத்தில் இலங்கையில் பணம் கடன் வழங்கும் வியாபாரத்தை ஒழுங்குறுத்துவதற்கும் மேற்பார்வை செய்வதற்கும் அத்துடன் சேமிப்பு வைப்புகளை பெற்றுக் கொள்ளாத நுண்நிதி நிறுவனங்கள் அனைத்தையும் ஒழுங்குறுத்துகையின் கீழ் கொண்டுவருவதற்கும் இந்த துறைக்குரிய சகல தரவுகளையும் தகவல்களையும் ஒன்று திரட்டுவதனை நோக்காகக் கொண்டு, நடைமுறையிலுள்ள நுண்நிதி சட்டத்தை இரத்துச் செய்வதற்கும், நிதி அமைச்சினால் நிர்வகிக்கப்படவேண்டிய விதத்தில் சுயாதீன நிறுவனமொன்றாக 'கடன் ஒழுங்குறுத்துகை அதிகாரசபையை' பாராளுமன்ற சட்டமொன்றின் மூலம் தாபிப்பதற்கும் நிதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.