• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-08-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மாத்தறை தொழிற்பயிற்சி நிலையமொன்றைத் தாபிப்பதற்கு நிதியுதவி பெற்றுக் கொள்ளல்
- கட்டுமானம் மற்றும் மோட்டார் வாகன திருத்தங்கள் அத்துடன் பராமரிப்பு, குளிரூட்டியும் வளிசீராக்கியும், உலோகம் மற்றும் வௌிச்சம்சார் பொறியியல், இலத்திரனியல் மற்றும் தொலைத்தொடர்பு மற்றும் உபசரிப்பு ஆகிய துறைகளில் மாத்தறையிலும் அதனை அண்டிய மாவட்டங்களிலுமுள்ள இளையோர்களுக்கு நிறுவன மற்றும் கைத்தொழில் பயிற்சியினை வழங்குவதை இலக்காகக் கொண்டு ஜேர்மனி அரசாங்கத்தின் நிதி ஒத்துழைப்புடன் இரத்மலானையிலுள்ள இலங்கை ஜேர்மன் தொழினுட்ப பயிற்சி நிறுவகத்திற்கு ஒத்ததாக மாத்தறை மாவட்டத்தில் தொழிற்பயிற்சி நிலையமொன்றைத் தாபிப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, ஜேர்மனியின் KfW (Kerditanstalt Fur Weideraifbau) இலிருந்து 15.7 மில்லியன் யூரோ கொண்ட நிதியுதவியைப் பெற்றுக் கொள்வதற்கும், தேவையான பயிற்சி வசதிகளுடனும் உபகரணங்களுடனும் கூறப்பட்ட பயிற்சி நிலையத்தை தாபிப்பதற்கும் அத்துடன் மாத்தறையில் உத்தேசிக்கப்பட்ட தொழிற்பயிற்சி நிலையத்திற்கும் அதேபோன்று கிளிநொச்சியில் தாபிக்கப்பட்டுள்ள இலங்கை ஜேர்மன் தொழினுட்பபயிற்சி நிறுவகத்திற்கும் சுயமான அந்தஸ்தை வழங்குவதற்கும் அத்துடன் பொதுவான ஆட்சிக் கட்டமைப்பில் இம்மூன்று ஜேர்மன் தொழினுட்பபயிற்சி நிறுவகங்களையும் முகாமிப்பதற்கும் கைத்தொழில், வாணிப அலுவல்கள், நீண்டகாலம் இடம்பெயர்ந்துள்ளவர்களின் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சுக்கு அங்கீகாரம் வழங்குவதற்கு நிதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.