• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-08-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மோதல்களின் போது பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முழுமையாகவும் பகுதியளவிலும் சேதமடைந்த இந்து ஆலயங்களை புனரமைத்தல்
- 30 வருட மோதல் காரணமாக முழுமையாகவும் பகுதியளவிலும் சேதமடைந்த வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள இந்து ஆலயங்களை புனரமைப்பதற்கான நிச்சயமான தேவை வடக்கு மாகாணத்தின் சமய பெரியோர்களினாலும் மக்கள் பிரதிநிதிகளினானலும் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. அதற்கிணங்க, இந்து சமய காலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஒத்துழைப்புடனும் பங்குபற்றலுடனும் மாவட்ட மற்றும் பிரதேச நிருவாகத்திற்கு ஊடாக தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வட மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சின் புனரமைப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 200 மில்லியன் ரூபா கொண்ட விசேட ஒதுக்கீடொன்றை கூறப்பட்ட புனரமைப்பு செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்காக வழங்கும் பொருட்டு தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வட மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.